தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,372-ஆக உயர்ந்துள்ளதாக என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,333 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,566 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 194 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4531 பேர் உயிரிழந்த நிலையில், 67,692 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 10,548 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 639 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.

*  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 559 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 12,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 70 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 4,55,216 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.71% ஆக உள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.44% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12.246 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 827 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12,219 ஆண்கள், 7,148 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

 மகாராஷ்டிரா – 74,  கேரளா – 1,  டெல்லி – 1,   குஜராத் – 1 ,  பீகார் – 2 தெலுங்கானா – 1,   ராஜஸ்தான் – 1,   ஜார்கண்ட் – 1,  ஆந்திரா – 2,ஹரியானா – 2,  கர்நாடகா – 21,  ஒடிசா – 2,  பஞ்சாப் – 8

* தமிழகத்தில் இதுவரை பிற மாநிலத்தில் இருந்து வந்த 1,253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் குணமடைந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடி கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்குமே கொரோனா பாதிப்பு உள்ளது.

* உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவு.

* ரத்தம், செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தேவை. என கூறிப்பிட்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top