கொரோனா விவகாரம்; பாஜகவின் முகத்திரையை கிழித்தார் மம்தாபானர்ஜி! அமித்ஷாவுக்கு நேரிடை கேள்வி!

ஊரடங்கை அறிவித்து விட்டு ரெயில்களையும் விமானங்களையும் ஓட்ட அனுமதிக்கிறீர்கள் இதனால்தான் கொரோனா தொற்று அதிகரிக்கிறது என்று பாஜகவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்

கொரோனா வைரஸ்ஸை சாக்காக வைத்து மேற்கு வங்கத்தில் தனது  அரசியலை பாஜக துவங்கி இருந்தது தெரிந்ததே.இப்போது அது முற்றி இருக்கிறது. உள்துறை மந்திரி அமித்ஷாவும் முதல்வர் மம்தாவும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொரோனா  விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளரும் வங்காள தலைமை செயலாளரும் கடுமையான கடிதங்களை பரிமாறிக்கொண்டது மட்டுமல்லாமல், அமித்ஷா மாநில அரசின் உள் விவகாரங்களில் தலையிட்டு கொரோனா நிர்வாகத்தில் குறைபாடுகள் உள்ளதாக பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். மம்தா பதிலளிப்பதற்கு முன்பே அவரது கடிதங்கள் ஒன்று ஊடகங்களை சென்றடைந்தது, இதனால் மம்தா கோபம் கொண்டார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அமித் ஷாவிடம் சொன்னேன், நீங்கள் தொடர்ந்து மத்திய குழுக்களை மேற்கு வங்காளத்திற்கு அனுப்புகிறீர்கள். மேற்கு வங்க அரசாங்கத்தால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.என்று அமித்ஷாவின் தலையிட்டுக்கு நேரிடையாக பதிலடி கொடுத்தார்.

நான் பொதுவாக இதையெல்லாம் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நான் அமித் ஷாவிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும் விமானங்களும் ஓடுகின்றன. நான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து கொரோனா பரவுவதை பாருங்கள்.அதில் கவனம் செலுத்துங்கள்  

எங்களுக்கு ஏற்கனவே 1 லட்சம் பாதிப்புகள் உள்ளன. சில பகுதிகள் அரசியலுக்காக பரவ வேண்டும் என்று விரும்புகின்றன. பீகார், ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய முடியும்? இந்த பேரழிவு சூழ்நிலையில், பிரதமர் தலையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ” என்று பாஜக வின் அப்பட்டமான கொரோனா அரசியலை தோலுரித்து காட்டினார்

எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் திடீரென மேற்கு வங்காளத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களை அனுப்புவது தன்னை “தொந்தரவு” செய்வதற்கான ஒரு அரசியல் சூழ்ச்சி என்று கூறியுள்ளார்.  மேலும், அவர் கூறும் போது

மேற்கு வங்காளத்தை தொந்தரவு செய்கிறார்கள் . அரசியல் ரீதியாக என்னை தொந்தரவு செய்யுங்கள், ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விசயத்தில் விளையாடாதீர்கள். ரெயில்களைப் பற்றி சில திட்டங்களைச் முடிவு செய்யுங்கள்

“இது என்ன முட்டாள்தனம்? நாங்கள் ஒருபுறம் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம், மறுபுறம் சூறாவளி. மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களையெல்லாம் அனுப்புகிறார்கள். ரெயில்வே அமைச்சகத்திற்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை? அவர்கள் அனுப்புவதற்கு முன்பு மாநில அரசுகளை அணுக வேண்டும். அவர்கள் ஏன் எங்களை கலந்தாலோசிக்கவில்லை? அவர்கள் எங்கள் அட்டவணையைப் பின்பற்றவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக வசதியானதை செய்கிறார்கள், பலவந்தமாக செய்கிறார்கள். இது மேற்குவங்காளத்திற்கு சிக்கலை ஏற்படுவதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் ஒரு இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்” என கொட்டித் தீர்த்து விட்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top