மும்பைக்கு ராணுவம் அனுப்பப்பட்டதா? மகாரஷ்டிரா மாநில மந்திரி பேட்டி

மும்பை மற்றும் புனேயில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் தொடர்ந்து அறிக்கை போர் நடந்துக்கொண்டு இருக்கிறது  

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மற்றும் புனேயில் மட்டும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய சிவசேனா அரசை நீக்க வேண்டும் என்று பாஜக குரல் எழுப்புகிறது. இது குறித்த பல வதந்திகளை மக்களிடையே பரப்புகிறது சமீபத்தில் வந்த வதந்தி மும்பை மற்றும் புனேயில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். இதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அந்த செய்தி வதந்தி என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும், வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதுகுறித்து அனில் தேஷ்முக் கூறுகையில் ‘‘மும்பை மற்றும் புனேயில் ராணுவம் குவிக்கப்படுகிறது என்று வாட்ஸ்அப், மற்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக வேண்டுமென்றே வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் தவறானது. மகாராஷ்டிரா சைபர் கிரைம் மூலம் இதுபோன்று வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top