சென்னையில் கொரோனா நோயாளிக்கு பாதுகாப்பு இல்லை! தொடரும் தற்கொலைகள்

ஏற்கனவே ஒருவர் தற்கொலை செய்துள்ள நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது

தமிழகத்தில் நேற்று மட்டும் 646 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவி இருந்தது   அதில் தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனாவால்  592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மராட்டியத்தில் இருந்து வந்த 35 பேரும், குஜராத்தில் இருந்து வந்த 6 பேரும், தெலுங்கானாவில் இருந்த வந்த 3 பேரும், டெல்லி, உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தலா 2 பேரும், கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. சென்னையில் 50 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து அவர் நேற்று மதியம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், அவரது அறையில் யாரும் இல்லாத நிலையில், திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இன்றும் அதுபோல் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ஒருவர் தற்கொலை- இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்படுவதில்லை. சந்தையில் அடைத்தது மாதிரி கொரோனா நோயாளிகளை அடைப்பது பெரும் குற்றம். ஏற்கனவே, அவர்கள் உடலால் [நோயால்] பாதிப்பு அடைந்து இருக்கிறபோது மன ரீதியாக மிகவும்  துவண்டு போய் இருப்பார்கள். அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். அப்படி தமிழக அரசு செய்வதில்லை.ஆகையால்தான் தற்கொலைகள் கூடுகின்றன இவைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு.அரசு நடைமுறை படுத்தவேண்டும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top