பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர் ,செவிலியர் ,சுகாதாரப்பணியாளர்கள் என யாருக்கும் சரியான பாதுகாப்பு கவசங்கள் இன்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள்

இவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கினால் தமிழக அரசு முழுப் பொறுப்பு எடுத்து கவனிக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மருத்துவர் ,செவிலியர் ,சுகாதாரப்பணியாளர்கள் இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் மக்கள் மத்தியில் இவர்களுடைய பிரச்சனை தெரியாமல் இருப்பதற்கு இவர்கள் சேவையை மதித்து கைதட்ட சொல்வது ,விளக்கேற்றுவது, விமானத்தில் வந்து பூ போடுவது என்று திசைமாற்றி விடுகிறார்கள்.

கொரோனா வந்து இறந்து போன மருத்துவரை புதைப்பதற்கு கூட இந்த அரசால் ஒரு இடத்தை பெற்று தரமுடிய வில்லை.

மருத்துவர்களை, சுகாதாரப் பணியாளர்களை மதிக்கிறோம் என்று இந்த அரசு சும்மா சொல்கிறது. உண்மையிலே என்ன நடக்கிறது என்றால்.யாராவது எங்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லை என்று சொன்னால் உடனே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள், இடம் மாற்றம் செய்து விடுகிறார்கள்.  

அப்படி பாதுகாப்பு உபகரணங்கள் கேட்ட இராமநாதபுரத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலு என்பவர் ராமநாதபுரம் நகராட்சியில் வேலை செய்து வருகிறார். ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படவில்லை. ஆகையால் அவர் தனது உயர் அதிகாரியிடம் புகார் செய்திருக்கிறார்.அதை தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்தி இருக்கிறார்.

இப்படி புகார் பண்ணுபவர்களை என்ன செய்யவேண்டும் என ஏற்கனவே உயர் அதிகாரிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்து இருப்பதால் அவர்கள் பாலுவை உடனடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு இட்டார்கள்

உடனடியாக பாலு தனது பணி இடம் மாற்றத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ;

“ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படவில்லை இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் என்னை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்தனர். இதை ரத்து செய்ய வேண்டும்”. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்

மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரரின் பணியிட மாற்றத்திற்கு உடனடியாக தடை விதித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கே சரியான பாதுகாப்பு இல்லை .பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டால் பணியிடை மாற்றம் என்றால் மக்களை யார் காப்பாற்றுவது?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top