‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு!

கொரோனா சிகிச்சைக்கு” “ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“ஹைட்ராக்சி குளோரோ குயின்” மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு சரியான மாத்திரை அல்ல என்று பல மருத்துவர்கள் கூறிவந்தாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத்திரை குறித்து பேசினார் என்பதற்காக இந்தியா உட்பட உலகமெங்கும் பல நாடுகளில் இந்த மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு கொடுக்க ஆரம்பித்தது.

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான “ஹைட்ராக்சி குளோரோ குயின்” மாத்திரை நல்ல பலனை அளித்ததாக தகவலும் பரப்ப ஆரம்பித்தார்கள்  

இதே கருத்தை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆமோதித்தார் . மலேரியா தடுப்பு மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிற காரணத்தால், இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை இறக்குமதி செய்தது. உலக அளவில் அந்த மாத்திரை தேவை அதிகரித்தது.

இதற்கிடையே மலேரியா தடுப்பு மாத்திரை கொரோனா சிகிச்சையில் பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சில ஆய்வுகளிலும் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் லான் கேட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா சிகிச்சையில் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை பாதுகாப்பானது அல்ல என்றும் இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் வெண்டிலேட்டரை பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவதை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் தேட்ராக்ஸ் கூறும் போது, “பல நாடுகளில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மருத்துவ பாதுகாப்பு கருதி மலேரியா தடுப்பு மாத்திரை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையில் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரிய வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தான் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை உட்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதன்பின் 2 நாட்களுக்கு முன்பு அந்த மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு விசயத்தில் அமெரிக்கா-இந்தியா  போன்ற நாடுகளின் அரசியல் சக்திகள் தங்கள் கருத்தை சொல்வதால் அறிவியல் பூர்வமான கருத்துக்கு இடம் இல்லாமல் போய் விட்டதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதற்கிடையே இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் பொதுமக்களுக்கான மருத்துவம் என்கிற அமைப்பு “ஹைட்ராக்சிகுளோரோ குயின் மருந்தை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top