பயிற்சியாளராகும் வாய்ப்பை ஏன் நிராகரித்தார் ‘சைக்கிள் மாணவி’?

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டி வந்த  சிறுமி ஜோதிகுமாரி தனக்கு வழங்கிய பயிற்சியாளராகும் வாய்ப்பை நிராகரித்தார்.

அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.


நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் இவரது குடும்பத்தினர் கஷ்டப்பட்டனர்.

எனவே பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு திரும்ப அவரும், 15 வயதான 8-ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜோதி குமாரியும் முடிவு செய்தனர்.

ஆனால் ஆட்டோவுக்கான வாடகையை செலுத்தாதால் அதை உரிமையாளர் பறிமுதல் செய்து விட்டார்.

இதனால் காயம் அடைந்த தனது தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஜோதி குமாரி கடந்த 10-ந் தேதி குருகிராமில் இருந்து புறப்பட்டார். 7 நாட்கள் தொடர்ந்து சைக்கிளில் பயணித்த அவர்கள் கடந்த 16-ந் தேதி பீகாரில் உள்ள சொந்த ஊரை வந்தடைந்தனர்.

ஜோதி குமாரியின் இந்த சாகச பயணம் நாடு முழுவதும் பேசப்பட்டது. 1200 கி.மீ. தூரத்தை 7 நாட்களில் கடந்த ஜோதி குமாரிக்கு பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்க அதிபர் மகள் இவான்கா டிரம்ப்பும்   பாராட்டு தெரிவித்து இருந்தார்

இந்தநிலையில் ஜோதி குமாரியின் இந்த சாக பயணத்தை பாராட்டிய இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, ஜோதி குமாரிக்கு முறையாக பயிற்சி அளித்து தேசிய போட்டிகளில் பங்கேற்க செய்வதற்கு முன் வந்தது.

மேலும் அவரை டெல்லிக்கு அழைத்து சென்று தேசிய அகாடமியில் பயிற்சி அளித்து பயிற்சியாளராகவும் வாய்ப்பு அளிக்க முன் வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஜோதிகுமாரி நிராகரித்துள்ளார்.

ஏன் இந்த வாய்ப்பை நிராகரித்தார் என்று இதுதொடர்பாக அவர் கூறுகையில்;

 “இவ்வளவு நீண்ட பயணத்திற்கு பிறகு நான் இப்போது உடல் ரீதியாக பலவீனமாக உணர்கிறேன். எனவே தற்போது கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்”

தற்போது நான் மெட்ரிக்குலேசன் படிப்பை படித்து வருகிறேன் எனக்கு படிப்புதான் இப்போது முக்கியம்.நான் படிப்பை எனது கனவாக பார்கிறேன்  


முன்னதாக குடும்ப பிரச்சினை காரணமாக தனது பள்ளி கல்வியை தொடர முடியாமல் போனது ,அதனால் வீட்டு வேலைகளில் ஈடுபட்டேன் இப்போது எனது படிப்புதான் முக்கியம்.பாராட்டு, நல்ல வாய்ப்புக்கு நன்றி

தற்போது பாராட்டுகளுடன் வாய்ப்புகளும் தேடி வரும் நிலையில் ஜோதி குமாரி தனது மெட்ரிக்குலேசன் படிப்பை முடிப்பதில்தான் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.சரியான முடிவு எடுத்த ஜோதி குமாரிக்கு பாராட்டுகள்!

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top