அதி தீவிரமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய அரசு, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்து உள்ளது

நேற்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்தது. 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 16277 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101-லிருந்து 1,31,868-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720-லிருந்து 3,867-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784-லிருந்து 54,441-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 833 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

*  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 587 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 4,09,615 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.68% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,275 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 765 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10,340 ஆண்கள், 5,932 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top