கைது செய்யப்படலாம் என முன்ஜாமீன் கேட்டு டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஐகோர்ட்டில் மனு!

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ் பாரதியை போல் கைது செய்யப்படலாம் என்று முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென கைது செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, பழைய வழக்கை தூசி தட்டி தமிழக காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது .. பின்னர் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் கோரியும், தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டியலின மக்கள் குறித்து தயாநிதி மாறன், அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யக் கூடும் என்பதால் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று பிற்பகல், காணொலி மூலம் நீதிபதி நிர்மல்குமார் இந்த மனுவை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top