தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா;பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக இருந்தது.மேலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  98 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 15,512 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பட்டியல்

மாவட்டம் மே 22 வரை மே 23 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 355 0 355
2 செங்கல்பட்டு 694 39 733
3 சென்னை 9,364 624 1 – ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 9,989
4 கோயம்புத்தூர் 146 0 146
5 கடலூர் 421 1 1 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 423
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 133 0 133
8 ஈரோடு 71 0 71
9 கள்ளக்குறிச்சி 121 0 121
10 காஞ்சிபுரம் 251 13 264
11 கன்னியாகுமரி 49 0 49
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 22 0 22
14 மதுரை 224 1 1 – உத்தர பிரதேசம் (செக் போஸ்ட்) 226
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 18 1 19
20 ராமநாதபுரம் 52 0 3 – மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 55
21 ராணிப்பேட்டை 89 1 90
22 சேலம் 49 0 2 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 – தெலுங்கானா (சேலம் GMKMCH) 52
23 சிவகங்கை 29 0 29
24 தென்காசி 83 2 85
25 தஞ்சாவூர் 80 0 80
26 தேனி 101 1 102
27 திருப்பத்தூர் 30 0 30
28 திருவள்ளூர் 675 17 5 – ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 697
29 திருவண்ணாமலை 173 6 4 – மகாராஷ்டிரா ( செக் போஸ்ட்), 1 – ஆந்திரா (செக் போஸ்ட்) 184
30 திருவாரூர் 35 0 35
31 தூத்துக்குடி 144 0 5 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 149
32 திருநெல்வேலி 271 0 11- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 282
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 72 0 72
35 வேலூர் 37 0 37
36 விழுப்புரம் 322 4 326
37 விருதுநகர் 95 0 1- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 – டெல்லி (செக் போஸ்ட்) 97
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+25 0 12 (5 – பிலிப்பைன்ஸ், 7 – லண்டன்) 74
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 5 0 5
மொத்தம் 14,753 710 49 15,512

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,447-லிருந்து 1,25,101-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583-லிருந்து 3,720-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534-லிருந்து  51,784-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 363 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

*  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 624 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 3,97,340 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.66% ஆக உள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 48.39% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,155 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 759 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 9,876 ஆண்கள், 5,631 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

மகாராஷ்டிரா – 24,  டெல்லி – 1,  மேற்கு வங்கம் – 3,  ஆந்திரா – 1, ராஜஸ்தான் – 6, உத்திரபிரதேசம் – 1,  தெலுங்கானா – 1

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

 பிலிப்பைன்ஸ் – 5, லண்டன் – 1


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top