திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்!

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை, தடுப்பு சட்டத்தில்  கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதாகக் கூறப்பட்ட புகாரில், திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அவரது இல்லத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, “தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என பேசினார்.

இப்பேச்சு கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், இன்று (மே 23) அதிகாலை, சென்னை, ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் அவரை போலீஸார் , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஏனென்றால், இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில், நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது நடவடிக்கை எடுப்பது குற்றம்

இதனிடையே, ஆணையர் அலுவலகத்தில் திமுகவினர் குவிந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ளே செல்ல முயற்சித்ததால் திமுகவினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆர்.எஸ் பாரதி கைதை அனைத்து தலைவர்களும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top