பாகிஸ்தானில் விமான விபத்து! வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கியது விமானம்!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே விமான விபத்து. பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை, பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. 

லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top