தமிழகத்தில் இன்று 776 பேருக்கு கரோனா; சென்னையில் 567 பேர் பாதிப்பு: மொத்த பாதிப்பு 14 ஆயிரத்தை தொட்டது

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 882 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் .

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 567 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 8,228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும். 

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 41 அரசு ஆய்வகங்கள், 25 தனியார் ஆய்வகங்கள் என 66 ஆய்வகங்கள் உள்ளன.

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 7588 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,72,532.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 3,55,893.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 12,464.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 13,967.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 776.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 479 பேர். பெண்கள் 297 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 400 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6282 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 7 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 94 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 66 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 567 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 8228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 9,000 என்ற தொற்று எண்ணிக்கையை நோக்கி செல்கிறது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது. மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் 62 சதவீதத்தினர் சென்னையிலும், 38 சதவீதத்தினர் பிற மாவட்டங்களிலும் உள்ளனர்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 655, திருவள்ளூர் 636, கடலூர் 421, அரியலூர் 355, விழுப்புரம் 322, திருநெல்வேலி 253, காஞ்சிபுரம் 236, மதுரை 191, திருவண்ணாமலை 171, கோவை 146, பெரம்பலூர் 139, திண்டுக்கல் 132, திருப்பூர் 114, கள்ளக்குறிச்சி 112 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

22 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 87 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 15 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 856 பேர். இதில் ஆண் குழந்தைகள் 463 பேர். பெண் குழந்தைகள் 393 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 12,026 பேர். இதில் ஆண்கள் 7837 பேர். பெண்கள் 4186 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1085 பேர். இதில் ஆண்கள் 675 பேர். பெண்கள் 410 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top