முககவசம் கேட்டதற்கு கொரோனா தடுப்பு மருத்துவர் பணிநீக்கம்!காவல்துறையினர் அடித்து துன்புறுத்தினர்

முககவசங்கள்  பற்றாக்குறை குறித்து கேட்டதற்கு மருத்துவர் ஒருவர்  பணிநீக்கம் செய்யப்பட்டு, அடித்து அதிகாரிகள் அவரை ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்களின் பங்கு மிக முக்கியத்துவம் நிறைந்தது தன்னுடைய உயிரை பணயம் வைத்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறார்கள். ஆனால் தங்களது அசௌரியங்களை சொல்கிறபோது இந்த அரசு அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறது.

முககவசங்கள்  பற்றாக்குறை குறித்து கவலைகளை எழுப்பிய ஒரு மருத்துவர் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அதிகாரிகள் அவரை ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? ஆம் இது நடந்தது வேறு எங்கும் இல்லை விசாகப்பட்டினத்தில்தான். கடந்த வாரம் எந்த பாதுகாப்பும் இன்றி திறக்கப்பட்ட தொழிற்சாலையில் விசவாயு கசிந்து ஒட்டுமொத்த கிராமமே மயங்கி விழுந்து 22 பேர் உயிர் இழந்தார்களே அதே ஊர் தான்!

   .

20 வருட அனுபவமுள்ள மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுதாகர் ராவ், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.கொரோனா சேவையில் தீவிரமாக பணியாற்றி வரும் அவர் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று புகார் அளித்திருக்கிறார்.அவருடைய புகார் ஏற்றுக்கொள்ளப்படாமல் கடைசியில் முககவசங்கள் கூட இல்லாமல் பணிபுரிய வேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டதையும் ஒரு முககவசத்தை 15 நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு விட்டிருப்பதை மனம்கொல்லாமல்   ஒரு வீடியோவில் பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் பரவவிட்டார். இது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிறகு, ஏப்ரல் 3 ம் தேதி, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராவ் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்  ​​“மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் முககவசங்கள்  வழங்கப்படவில்லை.’ என்று அதுவும் மக்களிடையே வைரலாக பரவியதால் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டது, அதன் பிறகு , டாக்டர் ராவையும் இடைநீக்கம் செய்தது. முறையான புகாரைப் பதிவு செய்வதற்குப் பதிலாக பொதுமக்களுக்குச் செய்தியை சொல்வதன் மூலம், அவர் மற்ற சுகாதாரப் பணியாளர்களின் மன உறுதியை சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் மன்னிப்பு கோரி ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.அரசு கண்டுகொள்ளவில்லை நகரத்தில் மிகவும் பிரசித்தி  பெற்ற ஒரு மருத்துவர் தங்களது பாதுகாப்பு கருதி பேசியதால் பழிவாங்கப்பட்டார் என்ற செய்தி நாடுமுழுதும் பரவியது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் மருத்துவர் சுதாகர் ராவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்கிற செய்தி மேலும் பரபரப்பை உண்டு பண்ணியது

விசாகப்பட்டினத்தில் ஒரு நெடுஞ்சாலையில் மருத்துவர் சுதாகர் ராவ் மற்றும் ஒரு போலீசாரும் எதிர்கொள்ளும் வீடியோக்கள் வைரலாக்கப்பட்டது. அதில் அவருடைய வாக்கு மூலமாக நடந்ததை விளக்குகிறார் மருத்துவர்.

மருத்துவரை ஆட்டோ ரிக்‌ஷாவில் ஒரு போலீஸ் அடித்து ஏற்றுகிறது அதற்கு முன்னாள் ,அவரது சட்டையை கழற்றி,  இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டி அடித்து ரோட்டில் படுக்கவைத்திருக்கிறது போலீஸ். ஒரு மிருகத்தை வதைப்பது போல் அவரை வதைக்கிறது. ஆயிரம் உயிரை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய ஒரு மருத்துவரை விசாகப்பட்டினம் போலீஸ் நடத்தும் விதத்தை மக்கள் பார்த்து அரசை கேள்வி எழுப்பியதும் போலிஸ் நடவடிக்கையை கண்டித்ததும் “குடிபோதையில் அவர் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர் மருத்துவர் என்று எங்களுக்கு தெரியாது” என்றும்  விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே.மீனா தெரிவித்தார்

மருத்துவர் நெடுஞ்சாலையில் தவறாக நடந்து கொண்டதாகவும்  சாலையில் இருந்த ஒரு தடுப்பை அகற்ற முயன்றதாகவும், ஒரு மது பாட்டிலை தெருவில் பறக்கவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

காவல்துறையினர் அங்கு செல்வதற்கு முன்பாக கயிறுகளால் கைகளை கட்டிக்கொண்டு அவரைத் தடுத்தது வழிப்போக்கர்கள்தான் என்றும் அவர்கள் வாய்கூசாமல் போய் கூறினார்கள் .

காவல்துறையினரைத் தடுத்து சேதப்படுத்தியதாக மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர் ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

“பல உயிர்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய ஒரு மருத்துவருக்கு இந்தியாவில் அரசு கொடுக்கும் மரியாதை இதுதான் மற்றும் காவல்துறையினரின் அதீத அதிகார பரவல் மனிதத்தன்மைக்கு எதிராக சமீபகாலமாக இந்தியாவெங்கும் வெளிப்படுகிறது கண்டனத்திற்குரியது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top