அதீத பரவல்;கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவு தொற்று உயர்ந்து இருப்பது குறித்து உலக நாடுகள் கவலை கொள்கின்றன

உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 50 லட்சத்தை நெருங்குகிறது, இதுவரை 300,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து,இந்தியா  உட்பட பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை எளிதாக்கத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பது எந்த மாதிரியான விளைவுகளை கொடுக்கும் என ஆராய்கிறார்கள்

இது இரண்டாவது கட்ட தொற்று-சமூகத் தொற்று இது பரவலான அச்சத்தைத் தூண்டியுள்ளது, எல்லா நாட்டுத் தலைவர்களும் மக்களை தனிமனித இடைவெளியை பராமரிக்க வலியுறுத்துகின்றனர்.

வரம்பற்ற அளவிலான உடற்பயிற்சிகளுடன், பூங்காக்களில் மக்கள் சூரிய ஒளியில் உலவ அனுமதிக்கப்படுகிறார்கள்.

உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பின் தினசரி அதிகபட்சமாக எண்ணிக்கையை  பதிவு செய்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 106,000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் குறித்து டாக்டர் டெட்ரோஸ் கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:- 

“கடந்த 24 மணி நேரத்தில், உலக சுகாதார அமைப்பில் 106,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன. கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் மிக அதிகமானவை இது  இந்த பரவல் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நான்கு நாடுகளில் மட்டுமே பதிவாகியுள்ளது என கூறினார்.

உலக சுகாதார அமைப்பும் மிகுந்த கவலை கொள்ளும் அளவிற்கு கொரோனா தொற்று பரவி வருவது அரசுகள் கைவிரித்து விட்ட நிலையில் மக்கள்தான் விழிப்புடன் முக கவசத்தோடும் தனி மனித இடைவெளியை பராமரித்தும் செயலாற்றவேண்டும் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top