மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட அம்பன் சூப்பர் புயல் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று 12 பேர் பலி!

வங்கக்கடலில் உருவான அம்பன் சூப்பர் புயல் இன்று மேற்குவங்கம் மற்றும் வங்கதேச பகுதிகள் வழியாக கரையை கடந்தது. 5 மீட்டர் உயர்ந்த ராட்ச அலைகள் எழும்பியதுடன், கனமழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பன் புயல் கரையை கடக்கும் போது மேற்கு வங்க மாநிலத்தையே புரட்டி போட்டது. அம்பன் புயல் தாக்குதலில் இதுவரை மேற்கு வங்கத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் இன்று பிற்பகலில் காற்று வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.

இதற்கு முன்னாள் 1999-ல் வந்த சூப்பர் புயல் ஒன்று  ஒடிஷாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானா ஆட்களை  பலி கொண்டது. அதன் பின்னர் 21 ஆண்டுகளுக்களுக்கு பிறகு வங்க கடலில் அம்பன் எனும் சூப்பர் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் முதல் மேற்கு வங்கத்தின் டிகாசியாவுக்கும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கும் இடையே கரையை கடந்தது. இது சுமார் 4 மணிநேரம் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ முதல்180 கி.மீ வரை பேய்க்காற்றும் கனமழையும் கொட்டியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.

இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருந்தது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் அம்பன் புயல் கரையை கடந்தது.

மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். அம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.

காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது.

புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகின்றன. பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் இரவு முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தொடர்ந்து 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் வீதிகளில் மிகப் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொன்டு வருகின்றனர். வங்கக் கடலில் இருந்து படுஉக்கிரத்துடன் கரையை கடந்த அம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top