குடிகாரர்களால் தமிழகத்தில் உயரும் கொரோனா; இன்று 743 பேருக்கு புதிதாக தொற்று

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று சாராயக்கடைகளை திறந்ததும் அதிகரித்து உள்ளது இன்று மேலும் 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது .

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

.எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பட்டியல்:

மாவட்டம் மே 19 வரை மே 20 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 355 0 355
2 செங்கல்பட்டு 560 58 3 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 621
3 சென்னை 7,671 557 8,228
4 கோயம்புத்தூர் 146 0 146
5 கடலூர் 420 0 420
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 126 0 1 – மகாராஷ்டிரா (PHC) 127
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 111 0 1 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 112
10 காஞ்சிபுரம் 209 14 223
11 கன்னியாகுமரி 49 0 49
12 கரூர் 79 0 79
13 கிருஷ்ணகிரி 20 0 1 – மகாராஷ்டிரா (PHC) 21
14 மதுரை 163 0 9 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 172
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 7 1 5- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 13
20 ராமநாதபுரம் 39 0 39
21 ராணிப்பேட்டை 84 0 84
22 சேலம் 49 0 49
23 சிவகங்கை 26 0 26
24 தென்காசி 72 1 2- மகாராஷ்டிரா (PHC) 75
25 தஞ்சாவூர் 75 1 76
26 தேனி 89 1 2- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 92
27 திருப்பத்தூர் 29 0 29
28 திருவள்ளூர் 571 23 594
29 திருவண்ணாமலை 155 0 11 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 166
30 திருவாரூர் 32 0 32
31 தூத்துக்குடி 91 1 21 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 113
32 திருநெல்வேலி 226 0 16- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 242
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 68 0 68
35 வேலூர் 34 0 34
36 விழுப்புரம் 311 1 6 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 318
37 விருதுநகர் 55 1 5- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 61
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+18 0 54
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 2 1 3
மொத்தம் 12,448 660 83 13,191


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top