தேர்தலுக்கு தயாராகும் அதிமுக- அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் கூண்டோடு ரத்து!

அதிமுக-வில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.

அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக-வில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. இதுவரை ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும்.  

இதேபோன்று அதிமுகவில் தொழில் நுட்ப பிரிவு சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

நான்கு மண்டலங்களுக்கும் சென்னை –  அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் – கோவை சத்யன், கோவை – ஜி.ராமச்சந்திரன், மதுரை – ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தவருடம் வரும் தேர்தலுக்கு இப்போதே அதிமுக தயாராகி வருகிறது என்பது தெரிகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top