மத்திய அரசின் தோல்வி! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பாதிப்பு  குறைந்த பாடில்லை.  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 157- பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து  36824- பேர் குணமடைந்துள்ள நிலையில்,  3029 பேர் பலியாகியுள்ளனர்.  ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா விசயத்தில் மத்திய அரசு தோல்வியை தழுவி உள்ளது புலம்பெயர் தொழிலாளிகளிடம் கருணையை காண்பிக்கவில்லை,உணவின்றி நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளிகள் குடும்பம், குடும்பமாக வழியில் செத்து விழுகிறார்கள் அவர்களுக்கு நிவாரணமாக கையில் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக மரணத்தையே மத்திய அரசு வழங்குகிறது.

கொரோனா பெயரை பயன்படுத்தி இருபது லட்சம் கோடி ருபாயில் இந்தியாவின் பெரும்பான்மையான துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது.மீடியாக்கள் இதை பேச தயங்குகிறது.கொரோனா தடுப்பில்  சிறப்பாக செயல்பட்டதாக அமெரிக்கா நாளை மோடிக்கு அவார்டு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top