சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது

தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி  பீகார் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக அரசிடமிருந்து சரியான பதில் வராததால் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். போலீசாரால் பின்பு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் மாவட்டமான  சேலத்தில் சுற்றுவட்டார  பகுதிகளிலுள்ள டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில்  நூற்றுக்கணக்கான பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  பணிபுரிந்து வந்தனர்.

ஊரடங்கு காரணமாக வேலை இழந்த அவர்களை பராமரிக்க  முடியாததால், அவர்கள் வேலை செய்து வந்த ஓட்டல் மற்றும் பேக்கரி  நிர்வாகங்கள், தொழிலாளர்களை கைவிட்டு விட்டதால் தெருவிற்கு வந்து விட்டார்கள் கையில் உள்ள பணமும் கரைந்து விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுடைய ஊருக்கு ,சொந்த மாவட்டத்திற்கு போவதற்கு முனைந்தனர்

ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டனர் தமிழக அரசு உங்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் என்று காவல்துறை சொல்லி பத்து நாட்கள் காத்திருந்தும் இதுவரை யாரும் எங்களை அனுப்பி வைக்க தயாராக வில்லை அதிகாரிகளிடமும் முறையிட முடியவில்லை

இந்நிலையில்  சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பீகார் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து போராடினர்

போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை வழக்கம்போல தமிழக காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது

அவர்களுக்கு போலீசார் எவ்வித உதவியும் செய்யவில்லை. இதையடுத்து, தங்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்ல அனுமதிக்கவும் மாட்டார்கள், இவர்களும் அனுப்பி வைக்கமாட்டார்கள்  இதை தட்டிக் கேட்டால் போலீஸ் கொண்டு அடிக்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று புலம்பெயர் தொழிலாளர்கள் கேட்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top