தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்;மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கைது!

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்க முயன்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி. கைது

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வீட்டிலிருந்து அனுசரிக்க மே பதினேழு இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து பதாகை ஏந்தி முழக்கமிட வேண்டும் என தனது கட்சிக்காரர்களும் அழைப்பை விடுத்திருந்தார் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி.

திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் நினைவேந்தலை மேற்கொள்ள முயற்சிக்கையில் அவரை தடுத்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் அவரையும், அவரது கட்சி நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறார்கள்.

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கு நீதி கோரும் தீர்மானம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றத் தீர்மானத்தைக் கூட மதிக்காமல், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்திருப்பது தமிழக அரசின் துரோகத்தினையே காட்டுகிறது”.என மே பதினேழு இயக்கம் விமர்சித்து உள்ளது

இனப்படுகொலை செய்யப்பட்டு இறந்த  மக்களுக்கு நினைவேந்துவது தமிழர் பண்பாடு, அதை தடுப்பது சட்டப்படி குற்றம்,அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையை தமிழக காவல்துறை தான்தோன்றித்தனமாக தடை செய்வது, இந்த அரசின் எடுபுடியாக காவல்துறை மாறிக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

“சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர் நினைவேந்தலை அனுசரிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று .தமிழக அரசின் தமிழர் விரோத அராஜகப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டித்து இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top