அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்!

இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதராக இருந்தவர் டு வெய் (வயது 58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் இல்லை.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா சில உண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த 2-வது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இஸ்ரேல் நட்பு நாடு என்று சொல்வதை விட கைகட்டி சேவகம் பார்க்கும் நாடு என்று சொல்லலாம்,சீனா மீது அமெரிக்க அதிபர் தொடர்ந்து வசைபாடிக்கொண்டு இருக்கிறார்.சீனா பெரியாதாக கண்டுக்கொள்ளவில்லை. டு வெய் கண்டனம் தெரிவித்த நிலையில் இறந்திருப்பது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இது அமெரிக்க சீன மோதலை பெரிதாக்கும் என தெரிகிறது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top