கொரோனா பரிசோதனையை குறைத்து டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியது தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வருகிற சூழலில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முக்கியத்துவம் கொடுத்து,கொரோனா பரிசோதனைகளை குறைத்துக்கொண்டு தொற்று எண்ணிக்கையை குறைத்து காண்பிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு ஏற்பட்டு இருக்கிறது

தமிழகத்தில் மே 7-ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய (16.5.2020) தகவலின்படி, 8,270 எனக் குறைந்துள்ளது. பரிசோதனை செய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைத்துள்ளது. அதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் காட்டுகிறார்கள்.ஆனால் டாஸ்மாக்கின் வியாபாரத்தை பெருக்க குடிகாரர்களுக்கு போலீசை வைத்தே சேவகம் செய்ய வைத்திருக்கிறது தமிழக அரசு

சென்னை உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. உடனடியாக இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் சாராயக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

பிறகு சும்மாவா இருக்கும் தமிழகம்  இதைத் தொடர்ந்து சென்னை காவல் எல்லை பகுதி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகளில் காலை 7 மணி முதலே குடிகாரர்கள் மதுபானங்களை வாங்க குவிந்தனர். அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா தொற்று பாதுகாப்பில் இருந்த போலீஸ் அனைவரும் குடிகாரர்களைக் காக்க போய் விட்டார்கள்

காலை 9 மணி முதல் மதுபானங்களை வாங்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்கிற ரீதியில் மதுக்கடைகள் முன்பு அமைக்கப்பட்ட வரிசையில் நிற்க வைத்து மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், கோயம்பேடு சந்தையில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.எடுத்திருந்தால் கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கும்   

ஒரு வாரத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஒரு சிலர் 3 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். டோக்கன்களை போலீஸ் விநியோகம் செய்தது கொரோனா நேரத்தில் விதியை மீறியவர்களை துரத்தி ,துரத்தி அடித்த போலிசுக்கு இது வேணும்மைய்யா என்று போலீஸ் காதுபட குடிகாரர்கள் பேசிக்கொண்டார்கள்.

சேலம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கடைகளுக்கு அருகில் உள்ள மைதானம், சாலை உள்ளிட்டவற்றில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டு குடிகாரர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டதால் பெரும்பாலான கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக நேற்றுபிற்பகல் 3 மணிக்குள் விற்பனை நிறைவடைந்தது.

மதுபானம் கிடைக்காதவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்த குடிகாரர்களுக்கு மறுநாளுக்கான டோக்கனில் நேரம் குறிப்பிட்டு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் சுமார் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது ஆக ,கொரோனா பரிசோதனையை கைவிட்டு விட்டு தமிழக அரசு இனி டாஸ்மாக் சாராயக்கடைகளை பராமரிக்க ஆயத்தமாகி விடும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top