தமிழீழஇனப்படுகொலையின்11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு; தமிழர் விடியல் கட்சி ஆதரவு!

தமிழீழ இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு; மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கைக்கு தமிழர் விடியல் கட்சி ஆதரவு

தமிழீழ இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு; மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கைக்கு அனைத்து அரசியல் இயக்கங்களும் சில அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்திருக்கிற நிலையில் தமிழர் விடியல் கட்சி தனது முகநூல் பதிவில் அனைத்து தோழர்களும் பங்கேற்க ஆதரவு தெரிவித்து உள்ளது.

தமிழர் விடியல் கட்சி தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது;

“சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசால் 2009இல் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மே 17 இயக்கத்தின் சார்பில் தமிழர் (மெரினா) கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதோடு, தமிழீழ தாயகத்தை வென்றெடுப்போம் என்கிற உறுதிமொழியும் எடுக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றால் இந்த ஆண்டு அப்படியான நிகழ்வு நடைபெற வாய்ப்பு இல்லாத காரணத்தினால், வருகிற ஞாயிற்றுக்கிழமை 17. 5. 2020 அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் அவரவர் வீட்டிலிருந்தே இறந்த மாவீரர்கள், இனப்படுக்கொலையில் இறந்த மக்களின் நினைவை ஏந்த மே 17 இயக்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருகிறது.

இந்த அழைப்பினை ஏற்று தமிழர் விடியல் கட்சி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்கிறது. தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் தனிமனித இடைவெளியினை கடைபிடித்து இனப்படுகொலைக்கு நீதி கோரி பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில், இதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும்விதமாக #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag ஐ டுவிட்டர் இணையதளத்தில் 17/05/2020 அன்று காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக பதிவேற்றி அதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என .தமிழர் விடியல் கட்சி அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top