தமிழகத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு;பட்டியல்

இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு புதிதாக  தொற்றை ஏற்படுத்தி இருக்கிறது;பலி எண்ணிக்கை71 ஆக அதிகரித்துள்ளது.   .

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9 ஆயிரத்து 674 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 240 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும்  கொரோனா  வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,108 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று  பட்டியல்

மாவட்டம் மே 14 வரை மே 15 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 348 348
2 செங்கல்பட்டு 430 20 450
3 சென்னை 5,636 309 1 – மாலத்தீவுகள் 5,946
4 கோயம்புத்தூர் 146 0 146
5 கடலூர் 413 3 416
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 112 1 1- மகாராஷ்டிரா 114
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 61 0 61
10 காஞ்சிபுரம் 165 11 176
11 கன்னியாகுமரி 31 4 – மாலத்தீவுகள் 35
12 கரூர் 56 56
13 கிருஷ்ணகிரி 20 20
14 மதுரை 132 6 5 – மகாராஷ்டிரா 143
15 நாகப்பட்டினம் 47 47
16 நாமக்கல் 77 77
17 நீலகிரி 14 14
18 பெரம்பலூர் 137 2 139
19 புதுக்கோட்டை 6 1- மாலத்தீவுகள் 7
20 ராமநாதபுரம் 31 31
21 ராணிப்பேட்டை 76 2 – குஜராத் 78
22 சேலம் 35 35
23 சிவகங்கை 13 13
24 தென்காசி 54 1 1- மகாராஷ்டிரா 56
25 தஞ்சாவூர் 70 1 71
26 தேனி 72 6 78
27 திருப்பத்தூர் 28 28
28 திருவள்ளூர் 495 21 516
29 திருவண்ணாமலை 136 3 1- மகாராஷ்டிரா 140
30 திருவாரூர் 32 32
31 தூத்துக்குடி 38 10 – மகாராஷ்டிரா 48
32 திருநெல்வேலி 114 22- மகாராஷ்டிரா 136
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 67 67
35 வேலூர் 34 34
36 விழுப்புரம் 306 306
37 விருதுநகர் 44 1 1 – கர்நாடகா 46
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 9 9
மொத்தம் 9,674 385 49 10,108

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top