பிரதமர் அறிவித்த வெற்றுப்பக்கத்தை இன்று நிதியமைச்சர் பூர்த்தி செய்வார்; ப.சிதம்பரம் ட்விட்!

பிரதமர் நமக்கு தலைப்பையும், காலிப்பக்கத்தையும் கொடுத்துள்ளார். என்னுடைய எதிர்வினையென்னவெனில் இந்த வெற்றிடத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என்று ப சிதம்பரத்தின்  ட்விட் பதிவு பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது

நேற்று மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி கொரோனா பாதித்த இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்து இருந்தார்

இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “பிரதமர் நமக்கு தலைப்பையும் பிறகு காலிப்பக்கத்தையும் கொடுத்துள்ளார். இயல்பாக என்னுடைய எதிர்வினையென்னவெனில் வெற்றிடம்தான். நிதியமைச்சர் இந்த வெற்றிடமாக உள்ள பக்கத்தை இன்று பூர்த்தி செய்வார் என்று எதிர்பாக்கிறோம்.

பொருளாதாரத்தினுள் கூடுதலாக இடப்படும் ஒவ்வொரு ரூபாயையும் கவனமுடன் நாம் எண்ணுவோம்.

யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் ஆராய்வோம். முதலில் நாங்கள் கவனிப்பது என்னவெனில் ஏழை மக்களுக்கு, பசியில் வாடுவோருக்கு, சீரழிந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதையே. தங்கள் சொந்த ஊர்களுக்கு பல கிலோமீட்டர்  நடையாய் நடந்து வந்து சேர்ந்தவர்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும் அவதானித்து வருகிறோம்.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் 13 கோடி அடித்தட்டு குடும்பங்களுக்கு உண்மையான பணம் என்ற அளவில் என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் பார்ப்போம்” என்று ப.சிதம்பரம் தொடர் ட்வீட்களில் பதிவு செய்து இருந்தார்

ப சிதம்பரத்தின் பல கேள்விகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக  அமைதி காத்து வருகிறது. அவர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொன்ன முடியாமல் திணறுவதை கொரோனாவின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பார்க்கிறோம். என சமூக ஆர்வலர்கள் பதிவு செய்திருப்பது கவனத்துக்குறியதுதான்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top