பயிற்சி மருத்துவர்கள் புகார்; தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் திடீர் பணியிட மாற்றம்

பயிற்சி மருத்துவர்களின் விடுதியை கரோனா வார்டாக மாற்றியதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பி.திருவாசகமணி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் விடுதியை கரோனா வார்டாக மாற்றவும், பயிற்சி மருத்துவர்களை அங்கி ருந்து வெளியேற்றி சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கு மாற்றவும் டீன் திருவாசகமணி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் மேலதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு பயிற்சி மருத்துவர்களாக வந்தவர் களுக்கு மார்ச் 31-ம் தேதியுடன் பயிற்சி முடிந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் அளிக்க அறிவுறுத்தினர்.

ஆனால், போதுமான பரிசோதனை கிட் இல்லை. எனவே, அவர்களுக்கு பரிசோதனை செய்யாமலே நெகட்டிவ் என சான்றிதழ் கொடுக்குமாறு டீன் திருவாசகமணி கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இப்புகார்களின் அடிப்படையில் டீன் திருவாசகமணி நேற்று முன்தினம் இரவு திடீரென பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி டீனாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக விருதுநகர் டீன் ரேவதி பாலன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக டாக்டர் ரேவதி பாலன் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top