புலம்பெயர் தொழிலாளர் துயரம்;மத்திய அரசின் தோல்வி! ம.பி சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி, 13 பேர் காயம்!

மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய அரசு கைகழுவி விட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை பல உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு எந்தவிதமான  முடிவும் எடுக்காமல்  இதை பற்றி  கவலைப்படாமல் மத்தியஅரசு இருப்பது வருத்தமளிக்கிறது.

மே 9 ம் தேதி ஹைதராபாத்திலிருந்து ஆக்ராவுக்கு மாங்காய்கள், மாங்கனிகள் ஏற்றிச்சென்ற லாரியில் நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஏறி அமர்ந்து சென்றனர். லாரி கேபினில் ஓட்டுநர், கிளீனர், இன்னொரு ட்ரைவர் இருந்தனர். இவர்கள் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். இரவு 11.30 மணிக்கு திடீரென்று  லாரி போனவேகத்தில் கவிழ்ந்து விட்டது.லாரியில் உள்ள பழங்கள் மீது அமர்ந்து வந்த புலம்பெயர் தொழிலாளிகள் 5 பேர் நசுங்கி அந்த இடத்திலே பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்

இறந்தவர்கள் லாரி டயரில் நசுங்கி பலியானதாகவும், லாரி படுவேகமாகச் சென்றதே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் 11 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் 2 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்..

மே 8ம் தேதி 16 புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு பலியான துயரம் மறைவதற்குள் இன்னொரு விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், அதுவும் கோரமான மரணம்.

ம.த்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பலியானோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், காயமடைந்தோர் விரைவில் குணமடைய அனைத்து துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இறந்துபோன புலம்பெயர் தொழிலாளிகளுக்கு பிரதமர் மோடி வெறுமனே வருத்தம் தெரிவிப்பதோடு நிறுத்தி விடுகிறார் அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோ இதுபோன்று இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு நிலைமையை சரி செய்வதோ இல்லை.என வருத்தமோடு சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top