சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர் கொரோனாவுக்கு பலி; பாதுகாப்பு கவசம் வழங்க கோரிக்கை!

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பில்  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் ஒருவர்  உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என  தொடர்ந்து கூறி வருகிற தமிழக அரசு தூய்மைப்பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் அளிப்பதில்லை  

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று வரை 40 பேர் பலியாகி இருந்தனர். சென்னையில் இன்று கூடுதலாக 2 பெண்கள் பலியாகினர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்து உள்ளார்.  இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.  இதேபோன்று வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதனால், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்தது.

இதற்கிடையே, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றுக்காக நபர் ஒருவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்து உள்ளார்.  45 வயதுடைய அவர், சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார பணியாளராக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். 

இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை சென்னையில் 27 ஆகவும், தமிழகத்தில் 43 ஆகவும் உயர்ந்துள்ளது. 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top