தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளது

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தீவிரப்பட்டு வருகிற சூழலில் எந்தவித பொறுப்பும் இன்றி தமிழக அரசு சாராயக்கடைகளை திறக்க அனுமதித்தது. முன்யோசனை இன்றி முழு ஊரடங்கை அறிவித்து கோயம்பேடு காய்கறிச்சந்தையை கொரோனா சந்தையாக மாற்றியது போல நேற்று சாராயக்கடைகளை திறந்து இன்று கொரோனா பாதிப்பு அதிகமாக்கி விட்டது தமிழக அரசு

சாராயக்கடைகளை நேற்று திறந்ததால் 44 நாட்களில் இல்லாத சமூக குற்றங்களும், கொலையும் ஒரே நாளில் அதிகரித்து விட்டது. குடித்துவிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததால் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.கொரோனா பாதிப்பும் அதிகரித்து விட்டது   

இந்நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தமிழக மக்களின் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. 

44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கைத்தட்டிம் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மது பிரியர்கள் சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அதன் காரணமாக இன்று கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது

இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்கட்சிகள் கருப்பு சட்டையுடன், கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது.இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அனுமதி வழங்கி உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top