தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா – இன்று 3 பேர் பலி! பாதிப்பு 6,009- ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 6,009- ஆக உயர்ந்துள்ளது

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.நேற்று சாராயக்கடைகளை திறந்ததால் இன்று அதிகமாக கொரோனா தொற்று பரவி இருக்கிறது  இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதாக சொன்னாலும் இன்னும் திறம்பட செய்யவேண்டும். 

ஆனாலும், கொரோனாவின் தாக்கம் மாநிலத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 547 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 37 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,009- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2,16,416 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 13,980 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலே அதிகமான மாதிரிகள் பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு அதிகமாகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 52 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 399 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது.

தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

 தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிகுறி எதுவும் இல்லாமல் 80 % பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறியே இல்லாமல் உறுதியானவர்களுக்கு மருந்துகள் அடங்கிய சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்.

வீட்டு கண்காணிப்பு என்பது ஐசிஎம்ஆர் கொடுத்த வழிகாட்டி நெறிமுறை ஆகும்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,605 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 58 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top