சென்னை காவல் துறையை தாக்கும் கொரோனா! பாதிப்பு 60 ஆக உயர்வு!

சென்னை காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்து உள்ளது.இன்று 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.ஆனாலும் அரசின் தவறான  கொள்கை முடிவினால் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது.

எனினும், பொதுமக்களில் பலர் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.  அதற்கு காரணம் அரசு திடீரென அறிவித்த முழு ஊரடங்குதான்.சென்னையில்  முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட 4 நாட்களில் மக்கள் சந்தைகளில் அதிக அளவில் குவிந்தனர்.அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அளிக்காமல் அப்படியே கூட வைத்தது.கூட்டத்தை கட்டுபடுத்தி தனிமனித இடைவெளியை பின்பற்ற முறையான பாதுகாப்பு வழங்கப்படாமையே சென்னையில் பாதிப்பு அதிகரிக்க காரணம்.

மக்கள் பாதுகாப்பு ,கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் சமீபத்தில் தொற்று பரவி வருகிறது.  சென்னையில் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் கூடுதலாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்து உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top