நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்

இன்று காலையில்தான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையிலிருந்து ரசாயன விஷவாயு கசிந்து வெளியேறி காற்றில் கலந்தது.

ரசாயன விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் மரணம் அடைந்தனர் என்ற செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

இந்நிலையில் தமிழகத்தில் நெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2  வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.

பாய்லர் வெடித்த விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பில்ட்டில் முதலில்  தீ பிடித்ததாகவும் அதிலிருந்து தீ கட்டுக்குள் அடங்காமல் பரவியது என்று சொல்கிறார்கள். விசாரனையில்தான்  உண்மை நிலவரம் தெரியவரும்   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top