நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு;லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்!

 

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார்

ரூ.1165 கோடி நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடு நடந்த புகார் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த புகாரை அளித்துள்ளார்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் 462 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர் முழுவதையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கே முதல்வர் பழனிசாமி ஒதுக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக திமுக வழக்கு தொடரும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்த மணி என்பவரின் குடும்பத்தினர் மூலம் டெண்டர் முறைகேடு நடைபெற்று உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த 4-ம் தேதி இந்த டெண்டர் முறைகேடு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top