ஊரடங்கு மீறல்;திருப்பதியில் அறங்காவலர் குழு தலைவர் சாமிதரிசனம்;சந்திரபாபு நாயுடு மகன் கண்டனம்!

திருப்பதி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்திருப்பதால், சந்திரபாபு நாயுடு மகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இவர் தனது 62-வது பிறந்த நாளான கடந்த 1-ந் தேதி காலை அவரது மனைவி, தாய் ஆகியோருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செயலுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனும், முன்னாள் அமைச்சருமான லோகேஷ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் முழு ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் குடும்பத்தாரை தரிசனத்திற்கு அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ்க்கு பதிலளிக்கும் வகையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் என்ற முறையில் வெள்ளிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு நடைபெறும் அபிஷேக சேவையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற அபிஷேக சேவையில் தனது தாயார் மனைவி ஆகியோருடன் கலந்து கொண்டேன். வேறு யாரையும் நான் அழைத்து செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top