கொரோனா கொடூரம்;டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை ஜன்னலில் இருந்து குதித்த 3 டாக்டர்கள்

உலகமெங்கு கொரோனா தடுப்பு சிகிச்சை பார்க்கும் டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லைதான். ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.

ரஷ்யாவில்  கடந்த இரண்டு வாரங்கலில் மூன்று முன்னணி சுகாதாரப் பணியாளர்கள  மருத்துவமனை ஜன்னல்களிலிருந்து மர்மமான முறையில் விழுந்து உள்ளனர், இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பணி பாதுகாப்பு அச்சத்தை அளித்து உள்ளது.

அந்த சுகாதாரப் பணியாளர்களில் இருவர் இறந்துவிட்டனர், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் விசாரிக்கப்படும் இந்த மூன்று சம்பவங்களும் ரஷ்ய பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தீவிர விவாதத்தைத் தூண்டி உள்ளன.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.இன்று புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,45,268 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வைரஸ் தொற்றுக்கு இன்று 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 18,095 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த போதிலும், எஞ்சிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் அங்கு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று  மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் நோவஸ்மான்ஸ்கயா மாவட்ட மருத்துவமனையில் டாக்டர் அலெக்சாண்டர் ஷுலேபோவ்(37 )  ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். தற்கொலை முடிவை எடுக்கும் முன்னர் தமது சக மருத்துவர் ஒருவருடன் காணொலி ஒன்றை பதிவு செய்த அவர்,தங்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி கொரோனா சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவதாகவும், தங்களுக்கு கொரோனா உறுதியான பின்னரும் பணியில் தொடர கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.<

ஆனால் டாக்டர் ஷுலேபோவ் கூறியது உண்மைக்கு புறம்பானது என கூறி, அவரது சக மருத்துவரிடம் ரஷ்ய போலீசார் விசாரணை மேர்கொண்டுள்ளனர்.

ஷுலேபோவ் தற்கொலைக்கு முயன்றது போலவே இதற்கு முன்னரும் இரண்டு பெண் மருத்துவர்கள், ரஷ்யாவின் கொரோனா பாதுகப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top