குஜராத்தில் கலவரம் போலீஸ் தடியடி; புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் ஒரு மாதமாக சரியான உணவின்றி வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கசொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தியதில் போலீஸ் தடியடி செய்து கூட்டத்தை கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

மேலும் ,குஜராத் போலீஸ் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாற்பது நாட்களாகியும் சரியான உணவும் தங்க இடமும் இன்றி வாடும் புலம்பெயர் தொழிலாளர்கள் குஜராத் அரசிடம் மூன்று முறை தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கச்சொல்லி மன்றாடி கேட்டுள்ளனர்.குஜராத் அரசு இவர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்க வில்லை.அதன் பிறகு எல்லா தொழிலாளர்களும் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். .

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 4வது முறையாக புலம்பெயர் தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலும் தங்களை வேலை செய்ய வைப்பதாகவும் சரியான உணவு ,இடம் கொடுக்கப்படவில்லை என்றும்  அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல போலீஸார் தங்களது பொய்யை பத்திரிக்கைவாயிலாக வெளியிட்டார்கள் “தொழிலாளர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு ஆகிய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டதாகவும்” சொன்னார்கள்.  

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. சூரத்தில் மட்டும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.

ஞாயிறன்று மட்டும் 374 கொரோனா புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது, ஒரே நாளில் 28 பேர் பலியாகியுள்ளனர். இதில் அகமதாபாத்தில் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,248 ஆகவும், பலி எண்ணிக்கை 290 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது குஜராத் போலீஸ் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top