இந்தியாவில் கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு 25% விகிதம் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாக, இரண்டாம் கட்ட ஊரடங்கு கடைசி மூன்று நாட்களில் கொரோனா   எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று திடீர் உயர்வை கண்டது  டெல்லி (427 புதிய நோய்த்தொற்றுகள்), குஜராத் (374), பஞ்சாப் (330), தமிழ் நாடு (266), அரியானா (66), ஜம்மு காஷ்மீர் (35) ஆகிய மாநிலங்கள் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாக, இரண்டாம் கட்ட ஊரடங்கின் கடைசி மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது கவலைக்குரியது. சுமார் 25 சதவீத பாதிப்புகள் அதிகரித்து உள்ளது.என தகவல்கள் வருகின்றன

நேற்று மட்டும் புதிய தொற்று 2,667 ஆக உயர்ந்து உள்ளன,இது சனிக்கிழமையன்று 2,564 என்ற சாதனையை முறியடித்தது, மிக மோசமாக பாதித்த  மாநிலமான மராட்டியம் தொடர்ந்து தன்னை முதலாவது மாநிலமாக தக்கவைத்துக்கொண்டுள்ளது

தொற்று அதிகரிப்பு பஞ்சாபில் மிகவும் வியத்தகு முறையில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு. கடந்த இரண்டு நாட்களில், கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது, இது வெள்ளிக்கிழமை 585 பாதிப்புகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1,102 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா நெருக்கடி இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அரியானாவும், பாதிப்புகளில் ஒரு பெரிய உயர்வை கண்டது, ஞாயிற்றுக்கிழமை 66 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன.அங்கு  இதுவரை ஐந்து கொரோனா இறப்புகள் உள்ளன. 

நாட்டின் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமான குஜராத்தில் 374 புதிய பாதிப்புகளும்  28 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இவை இரண்டும் ஒரே நாளில் மாநிலத்திற்கு அதிகமாகும். இதில் அகமதாபாத்தில் மட்டும் 274 புதிய பாதிப்புகளும், 23 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை இப்போது 5,428 ஐ எட்டியுள்ளது மற்றும் அதன் இறப்பு எண்ணிக்கை 290 ஆகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top