கொரோனா இறப்பு; மேற்கு வங்கத்தில் ஆளுனரை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டது பாஜக!

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைப்பு என்று மேற்கு வங்க ஆளுநர் தன்கரை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டது பாஜக என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்  

மேற்கு வங்கம் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்த உண்மையான தகவல்களை முதல்வர் மம்தா பானர்ஜி மறைக்கிறார். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 572 என்று மாநில அரசின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் புதிதாக எத்தனை பேருக்கு பாதிப்பு, மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற உண்மையான விவரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட வேண்டும். அப்போதுதான், மாநில மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும். வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் மேற்கு வங்க அரசு மட்டும் மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

கொரோனா வைரஸை ஒழிக்க மம்தா பானர்ஜி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இப்போது வரை மேற்கு வங்கத்தில் 33 பேர் மட்டுமே கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். 72 பேர் நீண்டகாலம் இருந்து வரும் மற்ற நோய்களால் (co-morbidities) இறந்ததாக மாநில அரசு தெரிவி்த்து இருந்தது

இதை பாஜக அரசு மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் நோயால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் 33 பேர் இறந்ததாகக் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கணக்கு காட்டுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது

கோ-மார்பிடிட்டிஸ் என்பது ஒருவருக்கு நீண்டகாலமாக உடலில் இருக்கும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் இருப்பதாகும். ஆகியவற்றுக்கு நீண்டகாலமாக மருத்துவச் சிகிச்சை எடுத்துவருதாகும்.

எல்லா மாநிலங்களிலும் உள்ளது போலதான்,  ஏன் உலகமெங்கும் இருக்கும் கணக்கெடுப்பு முறையில்தான் மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற நீண்ட கால நோய்களோடு இருப்பவர்களை தனியாகவும்  கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களை தனியாகவும் கணக்கு காட்டி வருகிறது.உலகம் பூராவும் இப்படிதான் கணக்கு எடுத்து வருகிறார்கள் [தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இறந்த நான்குக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொரோனா வார்டுகளிதான் நடந்தது. ஆனால், கொரோனா பாதிப்பில் அல்ல என்றார்கள் ]

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 33 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் மேற்குவங்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக மாநிலஅரசு தெரிவித்துள்ளது. அதாவது மே 1 மற்றும் 2-ம் தேதிக்கு இடையே 7 பேரும், ஏப்ரல் 30 முதல் மே 1-ம் தேதி இடையே 8 பேரும் கொரோனாவில் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது

ஏப்ரல் 30-ம் தேதிவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 105 ஆக இருந்தது என்று மாநில சுகாதாரத்துறை விளக்கி இருக்கிறது.  33 பேர் மட்டுமே கரோனாவில் இறந்துள்ளனர், மீதமுள்ள 72 பேர் நீண்டகால நோய்களால் இறந்தனர், தற்செயலாகவே கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறி அந்த இறப்புக்கணக்கை கொரோனா கணக்கில் சேர்க்கவில்லை என்றது  டாக்டர் குழு.

இதுதொடர்பாக டார்ஜ்லிங் தொகுதி பாஜக எம்.பி. ராஜு பிஸ்த் நிருபர்களிடம் கூறுகையில், “ முதல்வர் மம்தா பானர்ஜி 5 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அவர்கள்தான் யார் கொரோனாவால் இறந்தார்கள், இறக்கவில்லை என்பதை முடிவு செய்கிறார்கள். கொல்கத்தாவிலிருந்து 600 கிமீதொலைவில் இருக்கும் டார்ஜிலிங்கில் ஒருவர் கொரோனாவில் இறந்தால் அந்த மருத்துவர்களால் எவ்வாறு கொரோனாவில் இறந்தார், இறக்கவில்லை என பரிசோதனை இல்லாமல் முடிவு செய்ய முடியும்.?

உயிரிழந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மறைக்கிறது. குற்றச்சாட்டு கூற சரியான நேரம் இது இல்லை என்றாலும் மக்களிடம் உண்மையைக் கூறாவிட்டாலும் அது குற்றம்தான். மே.வங்கத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் போதுமான பரிசோதனைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை.

மாநிலத்தின் நிலைமையைக் கண்டறிய அனுப்பப்பட்ட மத்தியக் குழுவுக்கும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. அவர்கள் வந்தபோது திடீரென கொல்கத்தாவிலும், வடக்கு வங்கத்திலும் பரிசோதனையை அதிகப்படுத்தினர் “ எனக் குற்றம்சாட்டினார்

இப்படிதான் கேரளா அரசையும் குற்றம் சாட்டினார்கள் ஆனால் கேரளா தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்பால் வெகு சீக்கிரமாக கொரோனா பாதிப்பை குறைத்துவிட்டிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top