கோயம்பேடு சந்தை முடக்கம்; காய்கறி விலைகள் கிடு,கிடு உயர்வு! மக்கள் அவதி!

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்று ஊரில் பழமொழி சொல்வார்கள் அதுபோல ஆகிவிட்டது கோயம்பேடு சந்தைக்கு வந்த நிலைமை  

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில் கொண்டு வந்தது அரசு . நான்கு நாட்கள் திடீரென முழு ஊரடங்கு என்று முன்ஏற்பாடு ஏதும் செய்யாமல் தமிழக அரசு அறிவித்ததால் அமைதியாக இருந்த கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்தது தனிமனித இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்க முடியாத நிலையை அரசு உருவாக்கி விட்டது

இப்போது கொரோனா பரப்பும் மையமான கோயம்பேடு சந்தை உருவாக்கப்பட்டு விட்டது. பத்திரிக்கைகளும் அரசும் மக்களையே குறை சொல்கிறார்களே தவிர அரசு முன் திட்டம் இல்லாமல் திடீரென முழு ஊரடங்கை அறிவித்ததை விமர்ச்சனம் செய்வதில்லை. இது வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாகி விட்டது

கோயம்பேடு சந்தைக்கு வந்துசென்ற வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சந்தை கொரோனா பரப்பும் மையமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் அந்த சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. அதை வியாபாரிகள் ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில் லாரிகள் வந்து, சரக்குகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் வசதி கொண்ட 194 காய்கறி கடைகள் மட்டும் அந்த சந்தையில் இயங்க அனுமதிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் உள்ள மலர் மற்றும் பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.

முன்னதாக கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள காய்கறிகடைகளை இடமாற்றம் செய்வது, சில்லறை விற்பனையை தடை செய்வது, சிறு வியாபாரிகள் நுழைய தடை விதிப்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமையில் காய்கறி சந்தை வியாபாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனால் சிறு வியாபாரிகள் காய்கறிகள் மொத்தமாக வாங்க முடியாத நிலையை அரசு உருவாக்கி விட்டது. சில்லறை விற்பனையை தடை செய்து , சிறு வியாபாரிகள் நுழைய தடை விதித்தது. சிறு வியபாரிகளுக்கு கொள்முதல் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் மார்க்கெட்டுக்கு வெளியே கொள்முதல் செய்வதால் விலை அதிகமாக கொடுத்து வாங்கவேண்டியதிருக்கிறது, விலை அதிகமாக கொடுத்தும் சில நேரங்களில்  காய்கறிகள் கிடைப்பதில்லை. போலீஸ் எங்களை உள்ளே விட அனுமதிப்பதில்லை என்கிறார்கள் சிறு வியாபாரிகள்

இந்நிலையில், சாதரணமாக கிலோ நூறு ருபாய்க்கு விற்ற மிளகாய் ரு 250 க்கு விற்கப்படுகிறது.எல்லா காய்கறிகளும் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கவேண்டிய துர்பாக்கிய நிலையை அரசு உண்டுபண்ணி விட்டது என்று மக்கள் கூறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்கு வேலை இல்லாததால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.தொடர்ந்து ஊரடங்கை அரசு நீட்டித்துக் கொண்டே இருக்கிறது அரசு. கையில் இருந்த சேமிப்பு முழுவதும் தீர்ந்த நிலையில் இப்போது மத்திய தர மக்கள் கடன் வாங்க முடியாமலும்,EMI கட்டமுடியாமலும் தினறிக்கொண்டு வருகிறார்கள் இந்த நிலையில் காய்கறிகள் விலை ஏற்றம் மக்களை பெரிதும் பாதித்து இருக்கிறது.

சாதாரண ஏழை, எளிய மக்களை பற்றி சிந்திக்காமல் அரசு செய்யும் இந்த முன்யோசனையற்ற திட்டங்களால் கொரோனா சாவு  தடுக்கப்படுவதாக  நினைக்கலாம். ஆனால்,பட்டினி சாவை தடுக்கமுடியாமல் போய் விடும்! .       


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top