இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2,293; மிகப்பெரிய உச்சத்தை தொட்டது; பலி எண்ணிக்கை 1,218

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது.பலி எண்ணிக்கை 1,218 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 1,147 ஆக உயர்வடைந்து இருந்தது.  8,889 பேர் குணமடைந்தும், 25,007 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வடைந்து உள்ளது.  9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ல் இருந்து 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு  மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. மொத்த பாதிப்புகள் 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 1061 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு – 37,336 

சிகிச்சை பெறுபவர்கள் – 26,167

உயிரிழப்பு – 1,218

குணமடைந்தவர்கள் – 9,950

மராட்டியத்தில்  11,506 பேருக்கு கொரோனா; 1,879 பேர் குணமடைந்த நிலையில் 485 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத் – 4,721

டெல்லி – 3,738

மத்திய பிரதேசம் – 2,719

ராஜஸ்தான் – 2,666

உத்தரப்பிரதேசம் – 2,328

மாநிலம் வாரியாக முதல் ஆறு இடத்தில் இருக்கும் மாநிலங்கள் இவைகள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top