கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு; பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களை பொருளாதார ரீதியாக வேதனை அடையச்செய்யும் இந்த நீட்டிப்பு சரியான முடிவு அல்ல என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்  வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும். இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறை வழங்கப்படும். சிவப்பு நிறப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு தொடரும், அதேசமயம் ஆரஞ்சு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் செயல்பட அனுமதி வழங்கபடலாம்.

பச்சை நிறப்பகுதியில் விலக்கு வழங்க மாநில அரசு நிலையை ஆராய்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம். எனினும் மத்திய அரசின் வழிகாட்டும் நெறிமுறையை பின்பற்ற வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top