மேலப்பாளையம் இஸ்லாமியர்களுக்கு தடுப்பூசி போட மறுப்பு? சமூகச்சிக்கலை எதிர்கொள்ளும் மக்கள்!

திருநெல்வேலியை பொறுத்தவரை கொரோனா என்பது மேலப்பாளையத்திலிருந்து  பரவியது  என்று ஒரு பொய்யை ஆரம்பத்திலிருந்து இந்துத்துவ அமைப்புகள் கட்டமைத்து விட்டன

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் மேலப்பாளையம் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதி மேலப்பாளையம் மண்டலத்தில் இருந்து ஒரே நாளில் 22 பேர் கொரோனா அறிகுறிகளோடு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் மேலப்பாளையம் நான்கு பக்கமும் அடைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளும் 10க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசாரின் கண்காணிப்பு வளையத்தை தாண்டி மேலப்பாளையம் பகுதி மக்களால் வெளியேற முடியாத சூழல் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாத போராட்டத்திற்கு பின்னர் கொரோனா நோயாளிகள் படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர். நோயின் தாக்கத்தில் இருந்து மேலப்பாளையம் விடுபட்டாலும், அதனை சார்ந்த பிரச்னைகள் மேலப்பாளையத்தை தற்போது வாட்டி வதைக்கின்றன.

இந்துத்துவ அமைப்புகள் கட்டமைத்த பொய்களால் சாதாரண மக்களுக்கும் மாரகராட்சி ஊழியர்களுக்கும் கூட மேலப்பாளைய மக்கள் மீது ஒரு சந்தேகத தோற்றத்தை உருவாக்கி விட்டது.அதற்கு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு உதாரணமாகும் .

மேலப்பாளையம் முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் குழந்தை உண்டாகி 3 மாதமான பெண் ஒருவருக்கு  தடுப்பூசி  போட அழைத்துச் சென்ற போது.அங்கிருந்த செவிலியர்கள் ஊசியெல்லாம் போட முடியாது. கலெக்டர் உத்தரவு  என்று கூறியுள்ளனர்.

உடனே செவிலியர்கள் முன்பு கலெக்டருக்கு போன் போட்டு அப்படியான உத்தரவு போடப்பட்டிருக்கிறதா என தெரிந்துகொள்ள முயன்ற போது

செவிலியர்கள் அவரை அழைத்து சார் அதெல்லாம் வேண்டாம் நாங்க ஊசி போடுகிறோம் என்று சொல்லி தடுப்பூசி போட்டு அனுப்பி உள்ளார்கள்.  

அப்படியென்றால் முதலில் தடுப்பூசி போடக் கூடாது என்று கலெக்டர் சொன்னதாக செவிலியர்கள் கூறியது பொய்யா ? ஏன் அவ்வாறு கூறவேண்டும் எது அவர்களை கூற வைத்தது? மாநகராட்சி ஊழியர்களிடையே குறிப்பாக தடுப்பூசி ,கணக்கெடுப்பு என மக்கள் மத்தியில் வேலை செய்யும் செவிலியர்கள் மத்தியில் இந்துத்துவ கருத்தை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை திணித்தது யார்? மாநகராட்சி நிர்வாகம் இதை சரி செய்யவேண்டும்.அப்படிப்பட்ட ஆட்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்   

மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்களை இந்த கொரோனா காலத்தில் எவ்வளவு வஞ்சிக்க முடியுமோ அவ்வளவு வஞ்சிக்கிறார்கள் இந்த மருத்துவமனை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும்என்பதில் மாற்றுகருத்து இல்லை

தினமும் இது போன்று முஸ்லிம்களுக்கு , குறிப்பாக மேலப்பாளையம் போன்ற ஊர்களில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள்.

மேலப்பாளையம் பகுதிகளில் இருந்து இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிலர் நெல்லை மாநகரில் உள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரம் கேட்டாலும், மருத்துவர்கள் அதற்கு வாய்ப்பே தருவதில்லை. சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா முடியும் வரை சிகிச்சைக்கு வழியில்லை என பதில் தரப்படுகிறது. இதனால் மேலப்பாளையத்தில் தங்கியிருக்கும் நோயாளிகள் அவசர கால சிகிச்சைகளை பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.

நெல்லை மாநகரில் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் புதன்கிழமை தோறும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சமூக பரவல் மற்றும் கூட்டம் காரணமாக தற்போது மாநகராட்சி சுகாதார துறையினர் இப்பணிகளை தள்ளி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு 6 மாதம், ஒரு வயது என குறிப்பிட்ட பருவத்தில் போடப்படும் தடுப்பூசிகளை போட முடியாமல் தாய்மார்கள் தவிக்கின்றனர். வார்டு வாரியாக அறிவிப்பு வெளியிட்டு, அந்தந்த பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட மாநகராட்சி முன்வர வேண்டும்.

ரம்ஜான் மாதம் தொடங்கிவிட்ட சூழலில், மேலப்பாளையம் பகுதிவாசிகள் இரவு நேரத்தில் கடைகளை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் மாலை நேரத்தில் கூட அங்கு கடைகள் திறந்திட அனுமதியில்லை. நெல்லை மாநகரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு இரவு நேர உணவுகளான சப்பாத்தி, புரோட்டா, இட்லி, தோசை வழங்கிட சில உணவகங்கள் பார்சலை அளித்து வருகின்றன. ரம்ஜான் நோன்பின் அவசியம் கருதி, மேலப்பாளையம் பகுதியில் இரவு நேர உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அடிப்படையில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக இருந்த நெல்லை மாவட்டம், தற்போது படிப்படியாக அந்நோய் தாக்கத்தில் இருந்து மீளத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் இன ரீதியான ஒதுக்கலும், பாரபட்சமும் இஸ்லாமியர்கள் மீது திணிக்கப்படுவது தவிர்க்கவேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top