மருத்துவர்களுக்கும்,காவலர்களுக்கும் சரியான பாதுகாப்பு கருவி இல்லை; பாதுகாவலரிடமிருந்தே பரவும் கொரோனா!

கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை காப்பற்றும் மருத்துவர், செவிலியர்,சுகாதாரப் பணியாளர் காவல்துறை இவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் இவர்களிடமிருந்தே தொற்று புதிதாக பரவுகிறது.  

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா பாதித்த பெண் பிரசவத்தின்போது பலியானதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் அதிக தொற்று ஏற்பட்டு மக்கள் அவதிபடுகிறார்கள்.இதற்கான காரணம் என்ன? தற்போது தொற்று எங்கிருந்து பரவுகிறது ?

சென்னையில் கொரோனாவின் கொடூர தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் சென்னையை விட அதன் கோர தாண்டவம் வட சென்னையில் அதிகமாக உள்ளது. கொரோனாவின் தாக்கத்தால், மக்கள் மே மாத கோடை வெயிலின் தாக்கத்தை மறந்து விட்டனர்.

இரண்டாவது கட்டமான கொரோனா தாக்குதல் எங்கிருந்து பரவுகிறது என தமிழக அரசு இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் எதை எதையோ செய்கிறது,மக்களை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கிறது என்கிற செய்தி மட்டும் வருகிறது.

உண்மையிலே இரண்டாவது கட்டமான கொரோனா தாக்குதல் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பவர்களிடமிருந்தே வருகிறது என்பது முரணான ஒரு விஷயம்.  

சென்னை போலீசில் ஏற்கனவே 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி விட்டார். இன்னொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் பாதிக்கப்பட்டு அவரும் வீடு திரும்பினார். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவர், எழுத்தர் மற்றும் ஒரு போலீஸ்காரர், உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் என 4 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டனர். இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இல்லை என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையில் மாங்காடு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று கொரோனாவால் புதிதாக தாக்கப்பட்டார். அவர் ரோந்து பிரிவில் பணியாற்றினார்.அவருக்கு எவ்வித முன் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அவர்களும் பரிசோதனை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்பு முழுவதும் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தவிர சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ்காரருக்கும் நேற்று கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் வெளியூரில் உள்ளதால், அவர்கள் தப்பினார்கள். நேற்று முன்தினம் சென்னை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கினார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணியாற்றும் போலீசார் ஒருவரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டார்.

இதனால் சென்னை போலீசில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 5-ஆக உயர்ந்தது. தொற்று உறுதியான போலீசார் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல மணலி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஒருவரையும் நேற்று கொரோனா பாதித்தது. நேற்று முன்தினம் 3 தீயணைப்பு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தீயணைப்புத் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

அதுபோல கொரோனா பாதித்த பெண் பிரசவத்தின்போது பலியானதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொக்கரிக்கும் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காக்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று விழுப்புரத்தில் கொரோனா சிகிச்சை பிரிவில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்த டாக்டர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் தாயும், சேயும் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் உடலை எடுத்து சென்று தகனம் செய்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகாரணங்கள் இல்லாமல் சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் 40-க்கும் மேற்பட்டோரும், இறுதி ஊர்வலத்தில் 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியாமல் வழக்கமான முறைகளிலேயே இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது.

மருத்துவமனைகளில் பிரசவ காலம் நெருங்கும் பெண்களுக்கு, பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் முறையான கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யாததால், பரிசோதனை முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி, பரிசோதனை முடிவு வருவதற்குள் வந்ததால் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யாததால் 25-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரசில் இருந்து காப்பாற்ற வேண்டியவர்களே அலட்சியமாக செயல்பட்டு கொரோனா பரவுவதற்கு காரணமாக இருக்கும் இந்த செயல் பல்வேறு பிரிவினர்களிடையே பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தமிழக அரசும், பல்வேறு ஊடகங்களும் கொரோனா பரவுவதற்கு மக்களே காரணம் என்று தொடர்ந்து ஒரு பொய்யை சொல்லிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தில் திடீரென கொரோனா தொற்று உயர்வதற்கு காரணம் அரசுக்கு சரியான  திட்டமிடல் இல்லாததே என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை

மற்றும், மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்காததால்,பாதுகாப்பற்ற முறையிலும் தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள்.பின் பாதிக்கப்பட்டு அவர்கள் குடும்பமும் பாதிக்கப்பட்டு அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.அப்படியான தொற்றுதான் சமீபத்தில் அதிகமாக கொரோனா பரவ காரணமாகியது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில் தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினாலே பாதி தொற்று குறைந்து விடும்.    


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top