சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது வேதனை அளிக்கிறது குறிப்பாக சென்னையில் சமீபத்தில் அதிகம் பரவியது முழு ஊரடங்கை திடீரென அறிவித்ததே காரணம் என கூறுகிறார்கள்

தலைநகர் சென்னையில்தான் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களை தாண்டியே உள்ளது. 

நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, சென்னையில் மட்டும் 768 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இந்த நிலையில்,  சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும் போது, சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். 

டெல்லியில் இது போன்றுதான் எந்தவிதமான அறிகுறியும் இன்றியும் தொற்று பரவியது. அது போல சென்னையிலும் இப்போது பரவ ஆரம்பித்து இருக்கிறது.இது கவலை அளிக்கின்ற விசயம் தமிழக அரசு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.திடீர் திடீரென அறிவிப்பு கொடுக்காமல்,மருத்துவக்குழு ,பொருளாதாரக்குழு,வணிகர்குழு  இவர்களிடம் கலந்து ஆலோசித்து மத்திய அரசின் கண் அசைவிற்கு காத்திருக்காமல் உடனடியாக ஊரடங்கு நீட்டிப்பு அல்லது நீக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடவேண்டும்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top