‘ஊரடங்கு பொருளாதாரத்திற்கு நிலையானது இல்லை’-என்று ரகுராம்ராஜன் ராகுல்காந்தியிடம் தெரிவித்தார்

பாஜக அரசு  ராகுல்காந்தி இந்திய பொருளாதாரம் பற்றி பேசும்போது கிண்டல் செய்வது அல்லது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்ற நிபுணர்களிடமிருந்து பயிற்சி அடுத்து வந்து பேசுங்கள் என்பது இது போன்று தொடர்ந்து கேலி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரபல பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் வீடியோ அழைப்பில் உரையாடினார்

அப்போது “ஊரடங்கு என்பது மிகவும் எளிதானது ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது” என ராகுல்காந்தியுடனான உரையாடலின் போது ரகுராம் ராஜன் தெரிவித்தார் .

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும்  பிரபல பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் வீடியோ காலில் உரையாடினார்கள். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியாவில் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நிவர்த்தி செய்ய நமக்கு சுமார் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும். நீண்டகால ஊரடங்கு பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும்.

என்றென்றும் ஊரடங்கு என்பது மிகவும் எளிதானது ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது.

ஊரடங்கை நீட்டிப்பதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். மக்களுக்கு நீண்ட காலமாக உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்பதால் நாம் ஒரு குறிப்பட்ட துறைகளை திறக்க வேண்டும். மீண்டும் திறக்கப்படுவதை நாம் திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தொற்றுநோய்க்குப் பிறகு மீட்புக்கான வழியை தேர்ந்தெடுப்பதில்  அறிவுஜீவிகளுடன் காங்கிரஸ் எம்.பி.யின் தொடர்ச்சியான வீடியோ உரையாடல்களில்  பிரபல பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் உரையாடலும் ஒன்று 

பாஜக தொடர்ந்து ராகுல்காந்தியை கிண்டல் செய்வதை விட்டு விட்டு அவர் சொல்லுவதை அக்கறையுடன் கவனித்தால் நல்லது என்று காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள் .

தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ரகுராம் ராஜன், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தால்  இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக  2013 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டு இருந்தார்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top