சென்னையில் காலை மழை;தமிழகத்தில் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்தது.  இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது கொரோனா நேரத்தில் குளிர்ச்சியை கொடுத்தது

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பும், 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பும் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இதில், பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் சென்றுள்ளது.  தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்லாமல் கூடியவரை தவிர்த்து விடுகின்றனர்.  

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்தது.  இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் வெப்பம் சற்று தணிந்தது.  குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.  ஒரு சில சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது.  இதனால் மின் வினியோகம் பல இடங்களில் தடைப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய கூடும் என கூறப்படுகிறது.  இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதன்படி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  இதேபோன்று கோவை, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top