இலங்கையில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கடற்படை முகாம் மூடப்பட்டது

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும்  கொரோனா மீண்டும் வலுப்பெற்று ,கடற்படை முகாம் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 100 க்கும் அதிகமான கொரோனா பாதிப்படைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத துறையின்  இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்நிலையில்,இலங்கையில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் கடற்படை முகாம் மூடப்பட்டு உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெல்சாராவில் கடற்படை முகாம் உள்ளது. அங்கு ஒரு அதிகாரிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பரிசோதனை நடத்தியதில், மொத்தம் 30 பேருக்கு கொரோனா தாக்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த முகாம், தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து மூடப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லா வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்களில் ஊரடங்கு நீடிக்கிறது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top