மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

ilayaraajaஇயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக இவர் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பின்னணி இசை கூட பெரியளவில் பேசப்பட்டது. காரணம், இளையராஜாவின் இசை அந்தளவுக்கு கதையோடு ஒன்றியிருந்தது.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் “பிசாசு” படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம், மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய இரண்டு படங்களிலும் படத்தின் நீளம் கருதி இளையராஜா அமைத்து கொடுத்த நல்ல பாடல்களையும் மிஷ்கின் பயன்படுத்தவில்லையாம்.

இந்த கோபத்தில்தான் இளையராஜா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால மிஷ்கின், தனது முந்தைய படங்களான ”சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே” ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவையே புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிராயும், கலை இயக்குநராக ஜெயஸ்ரீயும் பணிபுரிய உள்ளனர். எது எப்படியோ ரசிகர்களை இசையால் தாலாட்டினாலே போதும்.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top