புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண ராகுல், பிரியங்கா வற்புறுத்தல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி கூறியதாவது:-  “ ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் தீர்வு காண வேண்டும். 

மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமேயானால், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மட்டுமே நீட்டிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பசுமை மண்டல பகுதிகளில் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இந்தக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி,  “ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு மாநில எல்லைகளில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உரிய பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிறகு சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்றார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top